தளபதி 65 அப்டேட் விஜய்க்கு ஜோடி இவரா.?
தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 65 திரைப்படத்தில் பிரேமம் பட நடிகை கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இதனிடையே தளபதி விஜய்யின் 65-வது திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அந்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய்யின் 65-வது படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமான மடோனா செபாஸ்டியன் தமிழில் காதலும் கடந்து போகும், ஜூங்கா, வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
தளபதி 65 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லாக்டவுனுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.