தளபதி 65 திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தை அடுத்து தளபதி நடிகர் விஜய் நடிக்க தளபதி 65 திரைப்படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தளபதி விஜயை வைத்து ‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’ வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து இந்த தளபதி விஜய் – முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறார்கள்.

இந்த தளபதி 65 திரைப்படத்தை சன் டிவி தயாரிக்கும் என தெரிகிறது.

இந்த தளபதி 65 ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மீண்டும் தளபதி நடிகர் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த தளபதி 65 திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைக்கலாம் என எதிர்பார்த்த நிலையில் தமன் இசையமைக்கிறார் என ஒரு தகவலும் வந்துள்ளது.

இசையமைப்பாளர் தமன் இசைக்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல மார்கெட் உள்ளதால் ஏ ஆர் முருகதாஸ் தமனை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 2021 தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியிட செய்து உள்ளனர்.

error: Content is protected !!