Monday, September 27
Shadow

திட்டம் இரண்டு { பிளான் பி } திரை விமர்சனம்.ரேட்டிங் –3.75 /5

நடிகர் நடிகைகள் – ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த், அனன்யா ராம்பிரசாத், சுபாஷ் செல்வம், முரளி ராதாகிருஷ்ணன், ஜீவா ரவி, மற்றும் பலர்.

தயாரிப்பு – சிக்ஸர் என்டர்டைன்மென்ட் & மினி ஸ்டுடியோ.

இயக்கம் – விக்னேஷ் கார்த்திக்.

ஒளிப்பதிவு – கோகுல் பினாய்.

படத்தொகுப்பு – பிரேம்குமார் சி எஸ்

இசை – சதீஷ் ரகுநாதன்.

மக்கள் தொடர்பு – யுவராஜ்

திரைப்படம் வெளியான தேதி – 30 ஜூலை 2021

ரேட்டிங் –3.75 /5

தமிழ் திரைப்பட உலகில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதையைத் தேடிப் பிடித்து சொல்ல வேண்டும் என திரைப்படத்தின் இயக்குனர் நினைத்து இருப்பர் போலிருக்கிறது.

இதை போல் கதை களம் ஏற்கனவே தாதா 87 என்ற திரைப்படமும் இதை போல் உள்ள கதை களம் தான்.

சின்ன கருவோ எடுத்து கொண்டு கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் என்பதை யூகிக்க முடியாத ஒரு திரைக்கதை.

கிளைமாக்ஸில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் மனதை களங்க வைத்து விட்டார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், திருச்சியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

பேருந்தில் உடன் பயணிக்கும் கதாநாயகன் சுபாஷ் செல்வமை பார்த்ததும் மனசுக்குள் காதல் அரும்புகிறது.

சென்னையில் பணிக்கு சேர்ந்த சமயம், அவரின் நெருங்கிய தோழி அனன்யா ராம்பிரசாத் (சூர்யா) காணாமல் போகிறார்.

இந்நிலையில் கதாநாயகி ஐஸ்வர்யாவி ராஜேஷின் கல்லூரி தோழி அனன்யா ராம்பிரசாத் ( சூர்யா ) திருமணம் ஆகி சில மாதங்களில் காணாமல் போய்விட்டார் என்பதை அறிந்து அது பற்றிய விசாரணையில் ஈடுபடுகிறார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.
அனன்யா ராம்பிரசாத்
(சூர்யா) இறந்துவிட்டார், கொல்லப்பட்டார், உயிருடன் இருக்கிறார் என்ற பல தகவல்கள் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் குழப்புகிறது.

தோழியின் கணவர் கோகுல் ஆனந்திடம் விசாரிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, தோழி அனன்யா ராம்பிரசாத்
(சூர்யா) விபத்தில் இறந்ததாக தகவல் கிடைக்கிறது.

ஆனால் இது கொலை என்று நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கொலையாளியை தேட ஆரம்பிக்கிறார்.

அப்போது அவருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.

இறுதியில் கொலையாளி யார்?

எதற்காக கொலை செய்தார்?

என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா ?

அவரின் காதல் என்ன ஆனது?

என்பதே இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.

ஒரு க்ரைம் த்ரில்லர் ஆக ஆரம்பமாகும் கதை, பரபரப்பாக நகராமல் கொஞ்சம் தடுமாறி பின்னர் வேகமெடுத்து எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பத்துடன் கிளைமாக்சை நோக்கி சென்று உணர்வுபூர்வமாக முடிகிறது.

Read Also  சுட்டுப் பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்

இடையில் உள்ள சில திரைக்கதை தடுமாற்றங்களை சரி செய்திருந்தால் இன்னும் தடுமாற்றம் இல்லாமல் இருத்துறுதால் கொஞ்சம் நல்ல த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கம் போல் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

திரைப்படம் ஆரம்பத்தில் சிரித்து ரசிகர்களை கவரும் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் சீரியஸாகவும் கவர்ந்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரிக்கு உண்டான அதிரடி இல்லையென்றாலும், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால், பார்ப்பவர்களை கதைக்குள் கொண்டு செல்கிறார். போலீஸ் உடையில் அழகாக இருக்கிறார்.

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாநாயகியாக இந்த திரைப்படம் மூலம் பிரமோஷன் ஆகியிருக்கிறார்.

காவல்துறைக்கு உரிய கம்பீரத்தை முகத்தில் காட்ட கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.

பேச்சிலும், உடல்மொழியிலும் அதை சரி செய்ய முயற்சித்திருக்கிறார்.

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக வரும் கதாநாயகன் சுபாஷ் செல்வம், கிளைமாக்சில் அதிர்ச்சி கொடுக்கிறார்.

பாவல் நவகீதனின் வேடம் சிறியதாக இருந்தாலும், திரைப்படத்திற்க்கு பலம்.

அனன்யாவின் கணவராக வரும் கோகுல் ஆனந்த், சப் இன்ஸ்பெக்டர்களாக முரளி ராதாகிருஷ்ணன், ஜீவா ரவி, ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தில் இயக்குனர் சொன்னதை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், வித்தியாசமான கதையை அழகாக சொல்லி இருக்கிறார்.

திரைப்படம் முழுவதும் யூகிக்க வாய்ப்பு கொடுத்து, நழுவியது அபாரம். பிளாஷ்பேக் கதைக்கான மெனக்கெடலும், அதை சர்ச்சைக்கு இடமின்றி சொன்ன விதமும் அற்புதம். முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொடுத்து, அழுத்தமான கருத்தை சொல்லி இருக்கிறார்.

மெதுவாக செல்லும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கான மர்மத் தன்மைக்கு மிகவும் உதவுகிறது . கூடவே அழகாகவும் இருக்கிறது .

சதிஷ் ரகுநாதனின் இசையும் எளிமையாக இருந்தாலும், கதாப்பாத்திரங்களைப் போல், காட்சிகளுடனே பயணித்துள்ளது.

கிளைமாக்ஸ் டுவிஸ்ட், அதில் சொல்லப்படும் காரணம், மனரீதியான, உடல்ரீதியான சில விஷயங்கள் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனால், இந்தப் படம் திகட்டாத த்ரில்லர் படமாக அமையலாம்.

திட்டம் இரண்டு – த்ரில்லர். சஸ்பென்ஸ்  திரைப்படம்.

CLOSE
CLOSE