தினேஷின் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு

இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில், நடிகர் தினேஷ் நடித்து வந்த படம் ‘பல்லு படாம பாத்துக்க’. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். மேலும் யூடுப் மூலம் பிரபலமான அகஸ்டின், ஷாரா, அப்துல் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தமிழக தணிக்கை குழுவினர் மறுத்துள்ளனர். இதனையடுத்து தேசிய தணிக்கை குழுவை படக்குழு முறையிட்டது. அங்கு படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.