திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மார்ச் 7) காலமானார். அவருக்கு வயது 98.
திமுக மூத்த தலைவராகவும், நீண்டகாலமாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன்.
இவர் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை விட வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயோதிகம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவை சந்தித்து வந்தார் அன்பழகன்.
இந்த நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் (பிப்ரவரி 24) இரவு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று (மார்ச் 7) அவரது உயிர் பிரிந்தது.
இதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
கட்சி சார்பில் ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த க.அன்பழகனின் இயற்பெயர் ராமையா
* தி.மு.க தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கட்சியில் தொடர்ந்து இருந்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் க.அன்பழகன்
* கருணாநிதி – அன்பழகன் இடையிலான நட்பு 75 ஆண்டுகள் ஆழமானது.