திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்

சென்னை 05 மே 2021

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்

சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள அவருடைய இல்லத்தில் இருந்து கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 158 இடங்களில் வென்று 133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் இன்று காலை மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார்.

இன்று காலை (05-05-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் உடன் ஆளுமை சந்திக்கும்போது
கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.