திரைப்படம் எடுக்க தெரியாத இயக்குனர் ராம்- இயக்குனர் வெற்றி மாறன்-என்னை திட்டுங்க.. – இயக்குனர் மிஷ்கின்

திரைப்படம் எடுக்க தெரியாத இயக்குனர் ராம்- இயக்குனர் வெற்றி மாறன்-என்னை திட்டுங்க.. – இயக்குனர் மிஷ்கின்

அண்மையில் பாரம் என்ற தமிழ் படம் தேசிய விருதை பெற்றது.

இந்த படத்தை பெண் இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.

விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை  சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

படக்குழுவினருடன் இயக்குனர்கள் மிஷ்கின், ராம், வெற்றிமாறன் உள்ளிட்டர்களும் கலந்துக் கொண்டு படத்தை பாராட்டினர்.

இதில் மிஷ்கினின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துவிட்டது. சில நேரங்களில் கொஞ்சம் ஓவராகவே பேசிவிட்டார் மனிதர்.

மிஷ்கின் பேசியதாவது…

எந்த நடிகனும் ஒரு கேரக்டராகவே வாழ முடியாது. கற்பழித்தால் அது போலவே வாழ முடியுமா?

கேரக்டராகவே வாழ்ந்தார் என்று என் திரைப்படத்தில் எவனாவது சொன்னால் வெளியே போடான்னு சொல்லிடுவேன்.

நான் இயக்கிய சைக்கோ படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று சொன்னால். டேய் அது எல்லாம் ஒரு தடவ தான் பார்க்க முடியும்.

ஆனால் ஒருவன் படத்தை நிறைய முறை பார்த்தேன் என்றார்.

அவனுக்கு வேலையில்லை போல. அந்த படத்தில் ஒரு மயிரும் இல்ல..

பாரம் படம் பார்த்த அன்று நான் மது அருந்த வில்லை.

மது அருந்தி இருந்தால் பாரம் பட இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சென்று அவர் காலில் விழுந்திருப்பேன். ஸ்ரீதேவி என்னடீ படம் எடுத்து இருக்க.?

நிஜமாக சொல்றேன். எனக்கு ராமுக்கு வெற்றி மாறனுக்கு எல்லாம் படமே எடுக்க தெரியல. என்னடா படம் எடுக்குறீங்கன்னு எங்களையே நீங்க திட்டலாம்.

நம் சின்ன வயதில் நம் மலத்தை அம்மா அள்ளி கழுவி விட்டுப்பார்கள். ஆனால் அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் நாம் அப்படி எல்லாம் செய்ய மாட்டோம்.

பாரம் படத்தை பார்த்தா கண்டிப்பாக உடனே நாம் எல்லாரும் அம்மா அப்பாவ பார்க்க போவோம். நான் என் அம்மா அப்பாவுக்கு பணம் அனுப்பினாலும் நன்றாக பார்த்துக் கொண்டாலும் அவர்கள் என்னுடன் இல்லையே என்பதை இந்த பாரம் படம் சொல்லுகிறது.

இந்த படத்திற்கு போஸ்டர் கூட அடிக்கவில்லை என்று சொன்னார் பிரியா கிருஷ்ணமூர்த்தி. நான் என் செலவில் போஸ்டர் அடித்து நானே சுவர்களில் ஒட்டுகிறேன்.

என்று மிஷ்கின் பேசினார்.