தேர்தல் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு ‼*

தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷாலும், தென்னிந்தியா நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து அச்சங்கத்தின் பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.