தேவர் மகன் 2′ கதை தயார் – பிரபல இயக்குனர் தகவல்*

‘பிக் பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான இயக்குனர் சேரனுக்கு சென்னை வடபழனி கமலா திரையரங்கில் ‘வெல்கம் பேக்’ சேரன் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு திரையரங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர் பேசிய இயக்குனர் சேரன், பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களை வைத்து ‘தேவர்மகன் 2’ எடுக்க விருப்பம் என்றும், அதற்கான கதை தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். மேலும், இது தொடர்பாக எவ்வித பேச்சு வார்த்தையும் தொடங்கவில்லை என்றும். பத்மஸ்ரீ கமல்ஹாசன் தனக்கு வாய்ப்பளித்தால் ‘தேவர்மகன் 2’ படம் துவங்கும் என்றும் சேரன் கூறினார்.

error: Content is protected !!