நடிகர் விஷாலை எதிராக தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் இயக்குனர் மிஷ்கினும் கூட்டணி சேர்கிறார்கள்.
நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார்.
என்பதும், இதனை அடுத்து நடிகர் விஷாலே இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு.
சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகிய இருவரும் மாறி மாறி அறிக்கைகள் விட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.
மேலும் நேற்று ஜி5 நடத்திய சினிமா விழா ஒன்றில் பேசிய இயக்குனர் இயக்குநர் மிஷ்கின் நடிகர் தயாரிப்பாளர் விஷாலை மிகவும் தரக்குறைவாக பேசினார். என்பதும் தெரிந்ததே. இதனால் கோலிவுட் திரைஉலகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
ஐசரிகணேஷ் நடிகர் விஷாலை எதிராக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்க்கும் இயக்குனர் ஐசரிகணேஷ் மேலும் இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைப்பதாகவும், எனவே எந்த தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்றும் நடிகர் விஷால் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க விவகாரத்தில் நடிகர் விஷாலுடன் நேருக்கு நேர் மோதிய பிரபல தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் தற்போது இயக்குனர் மிஷ்கினை வைத்து படம் எடுக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கினை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவரது திரைப்படங்களின் தரம் குறித்து நான் அறிவேன் என்றும் எனவே இயக்குனர் மிஷ்கின் தயார் என்றால் நான் அவரை வைத்து படம் தயாரிக்க தான் தயார் என்றும் ஐசரி கணேஷ் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷாலை எதிராகவே ஐசரிகணேஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன
#Mysskin Sir, We always believe in you and your script, #Vels is ready when you are ready !!!
– @isharikganesh #DrIshariKGanesh #VelsFilmInternational #KaruppurajaVellairaja https://t.co/SiBKhWa5XW
— Vels Film International (@VelsFilmIntl) March 12, 2020











