தொலைக்காட்சி தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகை

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ’கோடீஸ்வரி’ என்ற போட்டி விரைவில் தொடங்க உள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த தகவலை தற்போது நடிகை ராதிகா உறுதி செய்துள்ளார். மேலும் முதல்முறையாக பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ’கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  1. VID-20191017-WA0040