தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்குமார் சாதனை

நடிகர் அஜித் குமார் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஆர்வம் காட்டி வந்தார். சமீபத்தில் டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலானது. இந்நிலையில், ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9வது இடத்தையும், பிரி பிஸ்டல் பிரிவில் 8வது இடத்தையும் பிடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்து இருப்பதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

error: Content is protected !!