தொலைக்காட்சி தொடராக கலைஞர் கருணாநிதியின் வாழ்கை வரலாறு*

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் ஏற்கனவே புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புத்தகத்தை மையமாக வைத்து தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி ‘நெஞ்சுக்கு நீதி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி தொடர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகவுள்ளது.