முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதி பிறந்த நாள் முன்னிட்டு ஜந்து திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்.
சென்னை 03 ஜூன் 2021
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதி பிறந்த நாள் முன்னிட்டு ஜந்து திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் இன்று 03 ஜூன் 2021 பிறந்த நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை மு. கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொரோனா நிவாரணம் நிதி இரண்டாவது தவணை ரூ.2,000 மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட ஜந்து திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கொரோனா நிவாரணத் தொகை இரண்டாவது தவணை ரூ.2 ஆயிரத்துடன், 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய பையும், அரிசி அட்டைதாரா்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
01 கோதுமை மாவு,
02 உப்பு,
03 ரவை தலா 1கிலோ,
04 சா்க்கரை,
05 உளுத்தம் பருப்பு
தலா அரை கிலோ,
06புளி,
07கடலை பருப்பு
தலா கால் கிலோ,
08 கடுகு,
09 சீரகம்,
10 மஞ்சள் தூள்,
11 மிளகாய் தூள்
தலா 100 கிராம்,
12 டீதூள் 100 கிராம் பொட்டலம் 2,
13 குளியல் சோப்பு,
14 துணி சோப்பு தலா 1
ஆகிய பொருள்கள் அடங்கிய பைகளை ரேஷன் அரிசி அட்டைதாரா்களுக்கு தமிழக முதல்வா் வழங்க உள்ளாா்.
12,959 கோயில்களில் மாத ஊதியமின்றிப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள், பூசாரிகள், பணியாளா்களுக்கு கொரோனா கால உதவித் தொகையாக ரூ.4,000, மளிகைப் பொருள்கள் அளிக்கப்பட உள்ளன.
பணியின் போது மரணம் அடைந்த முன்களப் பணியாளா்களான பத்திரிகையாளா்கள், மருத்துவா், மருத்துவப் பணியாளா், காவலா், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ஆகியவற்றையும் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.











