நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் வில்லனாக ‘சண்டக்கோழி’ பிரபலம் !*
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிக்கவுள்ள கதாபாத்திரங்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக ‘சண்டக்கோழி’ பட வில்லன் லால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் நாயகியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.