நடிகர் ரியோ – நடிகை ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், நாயகனாக ரியோ ராஜ் மற்றும் நாயகியாக ரம்யா நம்பீசன் ஆகியோர் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் பால சரவணன், முனிஷ்காந்த், ரோபோ ஷங்கர், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.