நடிகர் விஜய் நடிப்பில் ‘பிகில்’ திரைப்படத்தின் கதை விவகாரம் – உரிமையியல் வழக்குத் தொடர அனுமதி
இயக்குனர் அட்லி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் வரும் 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, செல்வா என்ற உதவி இயக்குநர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் ‘பிகில்’ திரைப்படம் தொடர்பாக உரிமையியல் வழக்குத் தொடர இயக்குநர் செல்வாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதனிடையே ‘பிகில்’ உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை.
என்றும். விதியை மீறி ஒளிபரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.