நடிகர் விமலின் அடுத்த திரைப்படத்தில் இணையும் தேசிய விருது நடிகை

பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கத்தில், நடிகர் விமல் தற்போது ‘சோழ நாட்டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக தெலுங்கு பட நடிகை கார்ரொன்யா கேத்ரின் நடிக்கவுள்ளார்.

இந்தப் படம் குறித்து கதாநாயகி கூறுகையில், தமிழ் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், இந்தப் படம் தனக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இவர் சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.