சாலை விபத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். மரணம்.

சென்னை 15 ஜூன் 2021

சாலை விபத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். மரணம்.

சஞ்சாரி என்கிற நாடகக் குழுவில் நடித்து வந்தவர் கன்னட நடிகர் விஜய்.

பின்னர் கன்னட திரைப்பட உலகில் வாய்ப்புகள் இவரை தேடி வர ‘சஞ்சாரி’ விஜய் என பிரபலமானார்.

‘ரங்கப்பா ஹோக்பிட்னா’ என்ற நிரைப்படம் மூலம் 10 வருடங்களுக்கு முன்பு திரைப்பட துறைக்கு வந்தார்.

இதனையடுத்து ‘கில்லிங் வீரப்பா’, ‘வர்த்தமானா’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

2015ல் ‘நான் அவனல்ல அவளு’ என்ற திரைப்படத்தில் திருநங்கையாக நடித்து இருந்தார்.

நடிகர் சஞ்சாரி விஜய் நடித்த ‘நானு அவநல்ல அவலு’ (நான் அவனல்ல அவள்) திரைப்படத்திற்கு வெகுவாக பாராட்டுக்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய சஞ்சாரி விஜய்க்கு அந்த வருடம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது.

கடந்த வருடம் ஊரடங்கில் மக்களுக்கு பெரும் உதவிகள் செய்தனர்.

சாலையில் விபத்துக்குள்ளான கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய திரைப்பட விருது பெற்ற கன்னட நடிகரான சஞ்சாரி விஜய் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தீடீரென வாகனத்தில் இருந்து கரண்ட் கம்பத்தில் மோதி சறுக்கி விழுந்ததில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் அடுத்த 48 மணி நேரம் அவருக்கு மிகவும் முக்கியமானது என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று நடிகரின் சகோதரர் சித்திஸ் குமார் தெரிவித்தார்.

மூளையின் வலது பக்கமும், தொடையிலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவரது மூளையில் ரத்த உறைவை நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி விஜய் மூளைச்சாவு அடைந்தார்.

சஞ்சாரி விஜய்யின் மறைவுக்கு கன்னட திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சஞ்சாரி விஜய்யின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!