நடிகர் விஷாலின் ‘இரும்புத்திரை 2’ படத்தில் இணையும் பிரபலங்கள்

பி.எஸ் மித்ரன் இயக்கத்தில், விஷால், அர்ஜுன், சமந்தா உள்பட பலரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய படம் ‘இரும்புத்திரை’. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், அதில் நடிகர் விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகிகளாக ரெஜினா மற்றும் ஷராரதா ஸ்ரீநாத் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இந்த வாரம் துவங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!