நடிகர் விஷால் – அனிஷா ஜோடியின் திருமணம் குறித்த தகவல்

நடிகர் விஷால் மற்றும் அனிஷா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களது திருமணம் நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘அயோக்யா’ படத்தை திரையிடுவது குறித்து தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.