நடிகர் விஷாலின் திருமணம் குறித்த தகவலை கூறினார் ஜி.கே. ரெட்டி.

நடிகர் விஷாலுக்கும் நடிகை அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனால் இதுவரை அவர்களின் திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், ‘தமயந்தி’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஷாலின் திருமணம் பற்றி பேசிய விஷாலின் அப்பா ஜி.கே ரெட்டி, நடிகர் சங்க மண்டபத்தில் தான் விஷால் – அனிஷா திருமணம் நடைபெறும் என கூறினார்.