நடிகர் விஷால் நடத்தி வரும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகத்தில் கணக்காளர் ரம்யா ரூ. 45 லட்சம் மோசடி நடிகர் வி‌ஷாலின் மேலாளர் அரி புகார் ஒன்றை அளித்தார்.

நடிகர் விஷால் நடத்தி வரும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி அலுவலகத்தில் கணக்காளர் ரம்யா ரூ. 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக அவரது மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஷால் சென்னை சாலிகிராமத்தில் குமரன் காலனியில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற திரைப்பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நடிகர் வி‌ஷால் ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர், ‘திமிரு’, ‘ஆம்பள’, ‘பாயும்புலி’, ‘இரும்புத்திரை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும், சொந்தமாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்

இதில் கடந்த 5 ஆண்டுகளாக திருமதி. ரம்யா என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கணக்காளர் ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர், கூறியிருப்பதாவது:

நடிகர் வி‌ஷால் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது.

அந்த பணத்தை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கையாடல் செய்தார்களா? அல்லது பணம் எப்படி மோசடி செய்யப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்துள்ளது.

எனவே ஊழியர்களை சோதனை செய்தபோது கணக்காளர் ரம்யா டி.டி.எஸ் தொகையிலிருந்து தனது கணவரான தியாகராஜன் என்பவரின் பர்சனல் வங்கி கணக்கிற்கும், அவர்களது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் சிறுக சிறுக ரூபாய் 45 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

இந்த மோசடி செய்த கணக்காளர் ரம்யாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் வி‌ஷாலின் மேலாளர் அரி என்பவர், வடபழனி போலீஸ் உதவி கமி‌‌ஷனர் ஆரோக்கியம் பிரகாசத்திடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

உதவி கமி‌‌ஷனரின் அறிவுறுத்தலின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் வி‌ஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.