மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீது திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகிகள் புகார் ஒன்றை அளித்தனர்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இவர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ‘‘நடிகர் விஜய்சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கோவில்களில் கடவுள்களுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

இது சமூக இனைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!