நடிகர் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது*
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் இன்று துவங்கியுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் அடுத்த 40 நாட்களுக்கு அங்கு நடைபெறுகிறது. மேலும் கதாநாயகனாக விஷால் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ஆஷ்யா என புதுமுகம் நடிக்கவுள்ளார். இதனிடையே முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா, நாசர், கவுதமி ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.