சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க மாநாடு என்ற திரைப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்திருந்தனர்.
அதற்குப் பிறகு பலமுறை இந்தப் திரைப்படத்தை பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
இதில் குறிப்பாக மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டது என்ற செய்திதான் வெளிவந்தது 3 மாதங்கள் முன்பு படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அறிவித்திருந்தார்.
இதுவரை வந்த செய்திகள் வதந்திகளை அனைத்தும் உண்மையாக்கியது.
உடனுக்குடன் சிம்பு தரப்பில் அவரே தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்க மகாமாநாடு என்ற திரைப்படத்தை தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.
இருப்பினும் மாநாடு திரைப்படத்தில் மீண்டும் சிம்புவை நடிக்க வைக்க சிலர் முயற்சி செய்து சிம்பு தரப்பில் பேச்சுவார்த்தைககு அழைத்தார்கள் அவர் சார்பாக அவரது தாயார் உஷா டி ராஜேந்தர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக சொல்லப்பட்டது. எனது மகன் சிம்பு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தவறாமல் மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என அவர் சொன்னதாக சொன்னார்கள்.
இதனிடையே நேற்று திடீரென பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் விரைவில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்தார்.
நேற்று சபரிமலை் செல்வதற்காக கோவிலில் சிம்பு மாலை அணிந்து கொண்டிருந்ததாக தெரிகிறது அங்கிருந்து இந்த மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். pic.twitter.com/Zl6t5YOXvH
— sureshkamatchi (@sureshkamatchi) November 5, 2019