நடிகை கீர்த்தி சுரேசுக்கு பிடித்தமான உடைகள்
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் தனக்கு பிடித்த ஆடைகள் பற்றி கூறியதாவது
எனக்கு ஆடம்பரம் இல்லாத சாதாரண உடைகளே பிடிக்கும். சினிமாவில் மட்டுமே விதவிதமான உடைகள் அணிவேன். எனக்கு பலாசோ, ஜீன்ஸ் அணிய பிடிக்கும். அனார்கலி, சல்வார் உடைகளையும் அணிவேன். கேஜுவல் உடைகள் சவுகரியமாக இருக்கும். எனது பீரோவில் புடவைகள் அதிகம் இருக்கும்.
உடம்பில் குத்துவது மாதிரி பெரிய டிசைன் மற்றும் கனமாக இருக்கும் புடவைகளை அணியமாட்டேன். ஒவ்வொரு உடைக்கும் காதணியில் இருந்து பேக் வரைக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். எனக்கு டிசைனிங் தெரியும் என்பதால் ஓரிரு முறை அணிந்த உடைகளை பிறகு புதிய டிசைன் வருகிற மாதிரி மாற்றி விடுவேன்.
எனக்கு மிகவும் பிடித்த நிறம் பச்சை. என் பீரோவில் அந்த நிறங்களில்தான் உடைகள் அதிகம் இருக்கும். இப்போது இளம் மஞ்சள், நீலம், ரோஸ் நிற உடைகளையும் தேர்வு செய்கிறேன். பீரோவில் துணிகளை நானே அடுக்கி வைப்பேன். உபயோகப்படுத்தாத உடைகளை ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன்.
பாரம்பரிய உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். மாடர்ன் உடைகள் அணிந்தாலும் எல்லை தாண்ட மாட்டேன். இயக்குனர்களும் உடை விஷயத்தில் என்னை கட்டாயப்படுத்தியது இல்லை. வீட்டில் இருக்கும்போது மேக்கப் போடுவது பிடிக்காது. சினிமாவில் மட்டும்தான் மேக்கப் போடுவேன்.
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.