நடிகை ஜோதிகா நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தது நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த டேனி திரைப்படம் OTT இனையத்தில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது..

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திரைப்படம் தியேட்டருக்கு பதில் நேரடியாக OTT யில் வெளியீட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது.

திரைக்கு வர தயாராக இருந்த 50- 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் முடங்கி உள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பாதியில் நிற்கின்றன.

ஊரடங்கு உத்தரவு முடிந்து திரையரங்குகளை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க தமிழக அரசு வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதனால் புதிய திரைப்படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.

இதனால் சிறு பட்ஜெட் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் முதலில் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் அடுத்தது கீர்த்தி சுரேஷின் பெண்குயின் போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகின.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டேனி திரைப்படமும் விரைவில் ஜி5 இனையத்தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த டேனி திரைப்படத்தை பி.ஜி.முத்தையா தயாரித்துள்ள திரைப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கி உள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த டேனி திரைப்படத்தில் அனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.