Friday, July 10
Shadow

நடிகை ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு.

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார்.

நடிகை ஜோதிகா இந்த திரைப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடு செய்ய உள்ளனர்.

அதன்படி இந்த திரைப்படம் வருகிற மே மாதம் 29-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை நாளை மே மாதம் 21 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.