நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள “லாக்கப்” திரைப்படமும் ஒடிடி இனையத்தில் வெளியாக உள்ளது.
நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் போன்ற திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி- இனையத்தில் வெளியான நிலையில், தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படமும் ஓடிடி- இனையத்தில் வெளியாக உள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால்,
இந்த “லாக்கப்” திரைப்படத்தை நேரடியாக ஓடிடி இனையத்தில் வெளியிட உள்ளனர்.
ஷ்வேத் புரடெக்ஷன் ஹவுஸ் சார்பாக நடிகர் தயாரிப்பாளர் நித்தின் சத்யா தயாரிப்பில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “லாக்கப்” அவருக்கு ஜோடியாக வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிரபல இயக்குனரும் நடிகருமான இயக்குநர் வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி.
சார்லஸ் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகைகள் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆரோல் கரோலி இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதன்படி இந்த திரைப்படம் ஜூலை மாதம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் போன்ற திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி- இனையத்தில் வெளியாகின.
அடுத்ததாக நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் “காக்டெய்ல்” திரைப்படமும் வருகிற ஜூலை 10-ந் தேதியும், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் “டேனி” திரைப்படமும் ஆகஸ்ட் 1-ந் தேதியும் நேரடியாக ஓடிடி- இனையத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.











