நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா?

இந்த வருட இறுதியில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும்  நிச்சயதார்த்தம் நடக்கிறது.

அடுத்தவருடம் திருமணம்” என்பதாக நயன்தாரா சொல்லிவிட்டதால் விக்னேஷ் சிவன்னின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என செய்திகள் சொல்கின்றன

எல்லாமே அதிகாரபூர்வமற்ற செய்திகள்தான்.!

விக்னேஷ் சிவனுனின் தரப்பில் இருந்தோ நயன்தாரா வின் தரப்பில் இருந்தோ இத்தகைய செய்திகள் வரவில்லை. 

இன்னும் சொல்வதாக இருந்தால் நயன்தாரா வின் அதிகார பூர்வ பத்திரிகையாளர்களாக இருக்கும் அந்த மலையாள தம்பதியர் வாயைத் திறக்கவில்லை. 

ஆனாலும் மற்ற செய்தியாளர்கள் கல்யாணச்செய்தியில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்கள்.

நயன்தாராவிற்க்கு தற்போது 35 வயது ஆகிறது.

விக்னேஷ்சிவனும் நயனும் லீவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வருகிறார்கள். இதையே அதிகாரப்பூர்வமான திருமணச்செய்தியாக அறிவிக்க வேண்டும் என்பதுதான்  விக்னேஷ்  சிவனின்குடும்பத்தார் ஆசை.!

“இப்ப என்ன குறை ? சந்தோஷமாகத்தானே  இருக்கிறோம் ” என தொடக்கத்தில்இருந்தே  கல்யாணத்தை தள்ளியே வைத்து வந்திருக்கிறார். இது தொடர்பாக இருவரும் கடுமையான விவாதம் செய்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

மலையாள தேசத்தில் உலவும் செய்தி என்னவென்றால் திருமணம் என்பதில் நயன்தாராவிற்க்கு உடன்பாடு கிடையாது என்பதுதான். எப்போதோ அவர் பிரபல பத்திரிக்கை ஆசிரியரிடம் நயன்தாரா அப்படி சொன்னாராம். 

ஆனால் காலம் அப்படியே இருப்பதில்லையே!

வேண்டிய அளவு சொத்து  சேர்த்தாகிது.விட்டது அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவித்தாகி விட்டது. குடும்பம் என்கிற போர்டு மாட்டிக்கொள்வதில் என்ன தப்பு? இருவரது ஜாதகமும் நல்ல பொருத்தமாக இருக்கிறது என்கிறது விக்கியின் குடும்பம்.

 

விக்கியின் அம்மாவுடன் நயன் பேசிய பின்னர்தான் தாய்மையின் மேன்மையை உணர்ந்தாராம். நயனின் குடும்பத்தினர் அவரது  சொந்த வாழ்க்கையில் தலையிட விரும்பவில்லை என்கிறார்கள் .இதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டார் என்கிறார்கள்.

 

நடந்தால்தான் திருமணம்