இயக்குனர் விக்னேஷ் சிவனை சைலண்டாக கழட்டி விட்ட நடிகர் அஜித்குமார்.!!
சென்னை 31 ஜனவரி 2023 இயக்குனர் விக்னேஷ் சிவனை சைலண்டாக கழட்டி விட்ட நடிகர் அஜித்குமார்.!!
நடிகர் சிலம்பரசன் டிஆர் நடித்த போடா போடி நிரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன்.
அதன்பின் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இந்த நானும் ரவுடிதான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதன் பின்னர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
அதன் பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல் கடந்த வருடம் வெளியானது.
இதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இருவரும் கதாநாயகியாக நடித்திருந்தனர்.
இந்தநிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த வருடம் மே மாதம் அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டானார்.
அதன்பிறகு எட்டு மாத இடைவெளிக்குப் பிறகுதான் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டார்.
நடிகர் அஜீத்குமார் நிரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் உற்சாகமாக இருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இந்த எட்டு மாத இடைவெளியில் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் தயார் செய்த கதை லைக்கா தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை.
இதனால் கடும் சோகத்தில் உள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், படப்பிடிப்பை தொடங்கும் முன்பே லைகா நிறுவனம் விலகியுள்ளது.
இந்த செய்தி தற்போது சமுக வலைதளங்கள் நெட்டிசன்களால் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவும் தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம் செய்ய முயன்றார்.
முடிவில் உறுதியாக இருந்த லைகா நிறுவனம் நடிகை நயன்தாராவின் சமரசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
AK 62 திரைப்படத்தின் கதையை நடிகர் அஜித்குமாரிடம் முழு கதையையும் கூறுவதற்கு நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது,
ஆனால் தற்போது நடிகை நயன்தாரா அந்த வாய்ப்பை நழுவவிட்டதாக கூறப்படுகிறது.
நடிகை அஜித்குமாரின் AK62 இயக்குனர் யார் என்பதை இன்னும் சில தினங்களில் லைகா நிறுவனம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித்குமாரின் AK62 திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக ஜனவரி 16 ஆம் தேதி தகவல் வெளியானது.
இதற்கான அறிவிப்பை நெட்ஃபிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜித்குமார் ரசிகர்களை குழப்பிய அந்த ட்வீட்டை தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்துள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் ஏகே 62 திரைப்படத்தின் இயக்குனர் என்று சூசகமாக கூறியதாக சிலர் கூறுகின்றனர்.
தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் இந்த சர்ச்சைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.