நியூ சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் Legend சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் இன்று இனிதே துவங்கியது.!*

நியூ சரவணா ஸ்டார்ஸ் பிரமாண்மாய் வழங்கும், அறிமுக நாயகன் Legend சரவணன் தயாரித்து, நடிக்கும்…“புரொடக்க்ஷன் நம்பர்-1” இன்று (01.12.19) காலை திரு. AVM சரவணன் அவர்கள் குத்துவிளக்கு
ஏற்ற, திரு. S.P. முத்துராமன் அவர்கள் clap அடிக்க, AVM ஸ்டுடியோவில் இன்று பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி எழுதி இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், Legend சரவணனுக்கு ஜோடியாக அறிமுக நாயகி கீத்திகா திவாரி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடங்களில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பிராமையா, காளிவெங்கட், மயில்சாமி, லதா, கோவைசரளா, தேவிமகேஷ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமான படமாக உருவாகிறது.

இன்னொரு கதாநாயகியாக பிரபல நடிகை ஒருவரும் நடிக்க இருக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, S.S.மூர்த்தி அரங்கம் அமைக்க ரூபன் எடிட்டிங் பொறுப்பை கவனிக்க, பட்டுக் கோட்டை பிரபாகர் வசனம் எழுத, முதல் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பு நிகில் முருகன். இப்படத்தின் படபிடிப்பு சென்னை பொள்ளாச்சி ஹிமாலயாஸ் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் “எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்” என்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி