நிர்வாண காட்சியில் நடித்த பின்னர், நான் பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன் – அமலா பால்

கதையின் நாயகியாக அமலா பால் நடித்துள்ள ஆடை படம் வருகிற ஜீலை 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு காரணம் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நிர்வாணமாக அமலா பால் நடித்துள்ளார் என்பதுதான்.

இது குறித்து அமலா பால் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

நிறைய படங்களில் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க சொல்வார்கள்.

அப்போது தான் தர்மசங்கடம் ஏற்படும்.

ஆனால் இந்த படத்தில் நிர்வாண காட்சியில் நடித்த போது தர்ம சங்கடம் ஏற்படவில்லை. கவர்ச்சியோ ஆபாசமோ இல்லை.

ரசிகர்கள் இதை இப்படியே எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிப்பதை கூறினேன். அதிர்ச்சி ஆன போதும் நல்ல கதையா? என்று கேட்டார்.

நியாயமான கதை என்றதும் சம்மதித்தார்.

நான் நடிக்க வரும்போதே என் அப்பா அனுமதி கேட்டபோது ‘நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும். எனவே எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே’ என சொன்னவர் அவர்.

நிர்வாண காட்சியில் நடித்த பின்னர், நான் பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன். முதல் நாள் படப்பிடிப்பில் பயம், பாதுகாப்பின்மை இருந்தது. காட்சி முடிந்த பின் அவை எல்லாமே என்னை விட்டு போனது.

தற்போது நான் என்னை பவர்புல் உமனாக உணர்ந்தேன்.” என தெரிவித்துள்ளார்.