சுல்தான்’ படத்தின் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன் – நடிகர் கார்த்தி .
அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது..
நடிகர் கார்த்தி பேசும்போது,
இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன்.அனைவரும் அதை விரும்புவோம்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார்.
எம்.ஜி.ஆர்.-ன் குணத்தை பின்பற்றி வருகிறார்.
காமராஜ், சென்றாயன், என்று ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.
பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போக விடாமல் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கு நன்றி.
அதை வடிவமைத்த பெருமை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனையே சேரும்.
இப்படத்தை திரையரங்கிற்கு குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.
ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவு பாராட்டுக்கள் வந்திருக்காது.
அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அனைவர் பற்றியும் பேசிவிட்டு கதாநாயகி ராஷ்மிகாவைப் பற்றி பேசவில்லையென்றால் எப்படி?
அவருக்கு இந்த நேரத்தில் மிக்க நன்றி என்றார்.
நடிகர் பொன்வண்ணன் பேசும்போது,
காலத்தின் பேரன்பு அனைவருக்கும் கிடைக்கட்டும். அப்படி கிடைத்த காலத்திற்கு நன்றி.
அதில் ஒன்று விவசாயம். அதில் முதலிலும், பெரிதும் பாதிக்கப்பட்டது சினிமாத் துறை தான்.
நடிகர் கார்த்தியுடன் அவர் நடித்த முதல் படத்தில் ஒன்றரை வருடம் காலம் பயணித்திருக்கிறோம்.
ஆனால், கார்த்தியிடம் முதல் படத்திற்கும், ‘சுல்தான்’ படத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சில பொறுப்புகள் கூடியிருப்பதை மட்டும் தான் பார்த்தேன்.
நடிகர் கார்த்தியைப் பற்றி கூறுவதற்கான உற்ற நேரமும், ஏற்ற சூழலும் இது என்பதால் தான் கூறுகிறேன்.
முதல் படத்தில் செய்த பணியை ஒவ்வொரு படத்திலும் செய்தாக தான் வேண்டும்.
இந்த பெருந்தொற்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பிடிவாதமாக திரையரங்கில் வெளியிட காத்திருந்தமைக்கு நன்றி என்றார்.
நடிகர் மயில்சாமி பேசும்போது,
என்னால் மறக்க முடியாத படம் ‘சுல்தான்’. ஆனால், நான் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்றதால், இப்படம் வெளியானதில் கவனம் சிறிது குறைந்து விட்டது.
இரண்டு பிள்ளைகளின் திருமணம் சமயத்தில் பொருளாதார உதவி செய்தவர் எஸ்.ஆர்.பிரபு.
இப்படத்தில் நான் இருக்கிறேனா? நான் நடித்த காட்சிகள் வருமா? என்று கேட்டேன்.
விவசாயம் சார்ந்த படத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு குறைந்தது 400 பேருக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக் கொள்வது மிகவும் சிரமம். அதைச் சிறப்பாக செய்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி என்றார்.
நடிகர் அர்ஜித் பேசும்போது,
இப்படத்தில் நடித்ததன் மூலம் தினமும் பலரும் தொடர்பு கொண்டு ‘தலையா’ என்று எனது கதாபாத்திரத்தின் பெயர் கொண்டே அழைக்கிறார்கள்.
அவர் அமைதியாகவே இருப்பார். ஆனால், படம் பார்த்தவர்கள் அதுபற்றி பேசும்போது என் கதாபாத்திரத்தை வலிமையாக அமைத்திருக்கிறார் இயக்குநர் என்பது தெரிகிறது என்றார்.
குள்ளமாக நடித்த பிரபு பேசும்போது,
சிறுவயதிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி எனது புகைப்படத்தை கொடுத்து வந்தேன். பிறகு, திருப்பூருக்கு சென்று விட்டேன்.
இப்படத்தை பார்த்துவிட்டு திருப்பூர் திரையரங்கில் வெளிவரும் போது அனைவரும் என்னைப் பாராட்டினார்கள்.
நடிகர் காமராஜ் பேசும்போது,
பெரிய ஜாம்பவான் நடித்திருக்கும் இப்படத்தில், நான் நடித்ததற்காக எனது சொந்த ஊரில் நன்றாக நடித்திருக்கிறாய்.
அது நான் நடிப்பதற்கு என்னை ஊக்கப்படுத்தியது. அதற்காக நடிகர் கார்த்திக்கு நன்றி.
நான் மிஸ் இந்தியா பட்டம் வென்ற போது நீ இதற்காக கடவுளால் படைக்கப்பட்டவன் என்று கூறினார்கள்.
அதுபோல, சினிமாவிற்காக படைக்கப்பட்டவர் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். அவரிடம் பல திறமைகள் இருக்கின்றது என்றார்.
நடிகர் சென்றாயன் பேசும்போது,
திரையரங்கில் கைத்தட்டல் வாங்கி நீண்ட நாள் ஆகின்றது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.
அதேபோல, நான் நடித்த அந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல்கள் விழுந்தது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தேன்.
கூறினார்கள் என்றார்.இசையமைப்பாளர்கள் விஜய், மெர்வின் பேசும்போது,
விஜய் (மெர்வின்) பேசும்போது,
இங்குள்ள படக்குழுவினர், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக் கொள்கிறோம்.
மெர்வின் (விஜய்) பேசும்போது,
விடியற்காலை 4 மணிக்கு அனைவரும் குடும்பத்துடனும், அதேசமயம் முககவசம் போன்ற பாதுகாப்போடு வந்து பார்த்தார்கள். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் கதைகூறும் போது எப்படி இருந்ததோ அதைவிட திரையில் நன்றாக வந்திருக்கிறது.
எங்களுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது,
100 பேரை வைத்துக் கொண்டு தயாரிப்பது சாதாரண விஷயமல்ல. அதை பிரமாண்டமாக சிறப்பாக தயாரித்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு.
மேலும், சிறு படங்கள் கூட ஓடிடியில் வெளியிடும்போது, மீண்டும் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி.
அதேபோல, இப்படத்திற்கு கொரோனா பீதியிலும், குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து செல்கிறார்கள் என்று செய்திகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்களுக்கும் மட்டுமல்ல, இப்படத்தை பார்ப்பவர்கள் அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும்.
எனக்கு என் அம்மாவைப் பிடிக்கும். அதுபோல சினிமாவைப் பிடிக்கும். சினிமா நீண்ட காலம் வாழ வேண்டும், என்றார்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் பேசும்போது,

கார்த்தியை இப்போது சுல்தான் என்று அழைக்கிறார்கள். அதுபோல, எஸ்.ஆர்.பிரபுவும் சுல்தான் தான். இப்படம் ஆரம்பத்திலிருந்தே பெரிய போராட்டமாக தான் இருந்தது. எங்களுக்கு சவாலாக இருந்தது வெப்பநிலை தான். காலையில் நாங்கள் எதிர்பார்த்த வெப்பநிலை மாலையில் தான் கிடைக்கும். அவ்வளவு நேரமும் காத்திருந்துதான் எடுப்போம் என்றார்.
எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,
எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் துறைக்கும் சிறப்பான படம் ‘சுல்தான்’. திரைத்துறையை மட்டுமே நம்பி இருப்பவர்கள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்கள்.
அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த சமயத்தில் ‘கர்ணன்’ படமும் வெளியாக இருக்கிறது. அப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
இப்படத்தில் இறுதிவரை எங்களுக்கு லால் சார் ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றி என்றார்.
நடிகர் லால் பேசும்போது,
நான் சுலபமாக தமிழில் பேசுவேன். ஆனால், உங்களுக்கு புரிந்துகொள்ள சிரமமாக இருக்கும்.
இந்த கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
அதைவிட, இப்படத்தில் லால் நன்றாக நடித்திருக்கிறார் என்று செய்தி, வீடியோ வருவதைப் பார்க்கும்போது திருப்தியாக இருக்கிறது.
இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பேசும்போது,
இப்படத்தை திரையரங்கிற்கு கொண்டு சென்ற எஸ்.ஆர்.பிரபு, அதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் சுல்தான் கார்த்தி சாருக்கும் நன்றி.
இப்படத்தை பார்த்தவர்கள், முதலில் நான் சென்றேன், பிறகு எனது குடும்பத்தை அழைத்துச் சென்றேன். எனது பெற்றோர்கள் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்கிறார்கள் என்று என்னை தொடர்பு கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படத்தில் எனக்கு அப்பாவாக இருந்தது லால் சார் தான்.
ஆனால், லால் சார் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்த நெப்போலியன் சாருக்கு நன்றி.
சுயேட்சையாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை செல்ல வேண்டும் என்று நடிகர் மயில்சாமி அண்ணனை வாழ்த்துகிறேன்.
முதல் பாட்டிலிருந்து இறுதிவரை படம் சிறப்பாக வருவதற்கு இசையமைப்பாளர்கள் தான் காரணம். அவர்களுக்கு நன்றி.
இறுதியாக, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இருக்கும் அடிப்படை இசையை எடுக்காமல் இசையமைக்க முடியாது.
Related posts:
சுல்தான் திரைப்படத்தின் ஒரு வரிக் கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்ட திரைப்படம் – நடிகர் கார்த்தி.
நான் நடித்த படங்களிலேயே ‘கண்ணாடி’ படம் தான் தயாரிக்கத் தூண்டியது – நடிகர் சந்தீப் கிஷன்
நடிகர் கார்த்தி நடித்த சுல்தான்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!
உணர்வு படத்தில் நான் வித்தியாசமான முதல்வர் – நடிகர் சுமன்
நமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். ‘கைதி 2’ எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். – நடிகர் கார்த்தி
கென்னடி கிளப்’ படத்தின் நான் நடிக்கவில்லை ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் – இயக்குநர் பாரதிராஜா.
அன்பு மயில்சாமி தனது தந்தை மயில்சாமியிடம் இருக்கும் பல நல்ல விஷங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை – சாய் பல்லவி!!
சர்தார் திரைப்படம் சிறப்பாக வருவதற்கு ஒவ்வொருவரும் கடுமையாக குழுவாக இணைந்து பணியாற்றினார்கள் – நடிகர் கார்த்தி!!
தமிழ்நாட்டு ரசிகர்களை எளிதில் திருப்திப் படுத்த முடியாது ” மிரட்சி ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா பேச்சு..

