நிலச்சரிவில் சிக்கிய ‘அசுரன்’ பட நாயகி மீட்பு

கேரளாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர், ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ‘கைட்டம்’ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியுள்ளார். அங்கு பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மஞ்சு வாரியர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.