நீதிமன்ற சந்திப்பில் மாறி மாறி திருக்குறளை மேற்கோள் காட்டிய கவிஞர் வைரமுத்து -பா சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல்துறையினரால் சமீபத்தில் ⛓கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் ஜாமின் மனு மீதான விசாரணையின் போது ப.சிதம்பரத்தை பார்க்க கவிஞர் வைரமுத்து நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது, ப. சிதம்பரம் ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்..’ என்ற குறளை வைரமுத்துவிடம் மேற்கோள் காட்டியதாகவும், அதற்கு கவிஞர் வைரமுத்து ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல..’ என்ற குறளை மேற்கோள் காட்டி, தைரியமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.