பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை 30 ஏப்ரல் 2021
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர கே.வி.ஆனந்த் மாரடைப்பால் இன்று காலை காலமானார்.
அவருக்கு தற்போதைய வயது 54
கே.வி.ஆனந்த், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவரது திடீர் மறைவு திரையுலகினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது உள்ளது.
அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து கே.வி.ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“வருந்துகிறேன் நண்பா!
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.”
கவிஞர் வைரமுத்து
இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளார்.
வருந்துகிறேன் நண்பா!
திரையில்
ஒளிகொண்டு
சிலை செதுக்கினாய்!வாஜி வாஜி பாடலை
ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!என்
எத்தனையோ பாடல்களை
ரத்தினமாய் மாற்றினாய்!இதோ
உனக்கான இரங்கல்பாட்டை
எங்ஙனம் படம் செய்வாய்?விதவையான கேமரா
கேவிக்கேவி அழுகிறது
கே.வி.ஆனந்த்!ஒளியாய் வாழ்வாய்
இனி நீ.— வைரமுத்து (@Vairamuthu) April 30, 2021











