நேர் கொண்ட பார்வை பற்றி கூவத் தொடங்கிய ட்வீட் குருவிகள்.; இதானே விஸ்வாசம்!

இந்த வருடம் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் அஜித்குமாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது.

எனவே இரு தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து பேட்ட படத்தை எப்படியாவது வீழ்த்தவேண்டும் அதன் வசூலை விஸ்வாசம் முந்த வேண்டும் என விஸ்வாசம் பட விநியோகஸ்தர் சில முயற்சிகளில் இறங்கினார்.

அதன்படி ட்விட்டரில் நிறைய பாலோயர்களை வைத்திருக்கும் சிலரை விலைக்கு வாங்கி அவர்களை கவனித்து நிறைய கூவ சொன்னார். அதன்படி அவர்களும் செய்தனர்.

இந்த நிலையில் அஜித்குமார் ரின் அடுத்த படமான நேர் கொண்ட பார்வை இன்று வெளியாகிவுள்ளது. இதன் பிரிமியர் ஷோ (பிரஸ் ஷோ) 6 தேதியை போடப்பட்டது.

பெரும்பாலான (90%) பத்திரிகையாளர்களுக்கு இந்த படம் அதிருப்தியை தந்துள்ளது.

எனவே மீண்டும் ட்விட்டர் குருவிகளை கவனித்துள்ளனர். அதன்படி அவர்கள் நேர் கொண்ட பார்வை படம் ஆஹா.. தல வேற லெவல்.. பெண்ணியம் காக்க வந்த தல என தங்கள் விஸ்வாசத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.