அஜித்குமாரின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் அடிச்சு தூக்கு பாடல்கள்; 500 மில்லியன் சாதனை.!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘விஸ்வாசம்’.

இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படத்துடன் மோதியதால் எதிர்பார்ப்பு எகிறுயது. இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்குமார் நயன்தாரா, விவேக், ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, கோவை சரளா, யோகி பாபு என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் டி. இமான் இசையில் செம ஹிட்டடித்தன.

இந்த நிலையில் இப்படத்தின் இசை ஆல்பம் வீடியோ 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் டி இமான் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்