Wednesday, July 15
Shadow

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கும் கார்த்தி-ராஜ்கிரண்?

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர் ஐயா முத்துராமலிங்கத் தேவர்.

ஆன்மிகவாதியாகவும் சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கிய இவர்

ஐயா முத்துராமலிங்கத் தேவர். பிறந்த தினம் அக்டோபர் 30, 1908  அக்டோபர் 30, 1963 காலமானார்.

ஐயா முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினமும் இறந்த தினமும் ஒரே நாளில் ஒரே மாதத்தில் வந்திருக்கிறது.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில்
பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு
தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த

இவரது பிறந்த நாளை தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் தேவர் குருபூஜை விழா என்ற பெயரில் கொண்டாடி வருகின்றது.

தேவர் குருபூஜை விழா மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும்.

தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.

இந்த நிலையில் தற்போது முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு ஒரு திரைப்படமாக உருவாக உள்ளது.

தேசிய தலைவர் என்ற பெயரில் அதை திரைப்படமாக தயாரிக்கவிருக்கிறாராம் ஜெ.எம்.பஷீர்.

இதில், ராஜ்கிரண், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் தயாரிப்பாளர் பஷீர் நடிக்கிறார்.

மறைந்த சிவாஜி கணேசன் அவர்களுக்கு ‘மேக்கப்’ போட்ட நடராஜன் என்பவர் தான் தேவர் கேரக்டருக்கும் மேக்கப் செய்யவுள்ளார்.