திரைப்படமாகிறது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு
பாரதிய ஜனதா கட்சி சார்பாக முதன்முறையாக பிரதமர் ஆனவர் வாஜ்பாய். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இவர் மரணமடைந்தார். இவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற தலைப்பில் என்.பி.உல்லேக் என்பவரால் புத்தகமாக எழுதப்பட்டு வெளியானது. இந்நிலையில் இந்த புத்தகத்தை திரைப்படமாக உருவாக்கும் உரிமையை பெற்று திரைக்கதை அமைக்கும் பணியை அமாஸ் பிலிம்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.











