பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி – இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் 11 தேதி அன்று வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்கம் கிடைக்காததால் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு திரையரங்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை நசுக்கும் அந்த பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் தமிழக அரசால் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.