பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர் இயக்குனர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை 13 ஜூன் 2021
பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வர் இயக்குனர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைக்க வேண்டாம் என இன்று காலை டிஜிபி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்த
மிக மிக அவசரம் என்ற திரைப்படத்தில் பெண் போலீசார் ஒருவர் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பவற்றை தெள்ளத்தெளிவாக அந்த திரைப்படத்தில் காண்பித்திருப்பார்
இந்த மிக மிக அவசரம் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த திரைப்படத்தில் கூறப்பட்டுள்ளது போலவே பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவித்த முதல்வர் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் நன்றி என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
பெண் போலீசாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது…
அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது…
ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை மிக மிக அவசரம் படத்தில் சொல்லியிருந்தோம்.
ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால் அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெரு வெற்றியைத் தந்தது.
திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமை கொள்கிறேன். மகிழ்கிறேன்.
பெண் போலீசார் சாலையோர பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் மரியாதைக்குரிய டிஜிபி அவர்களுக்கு மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படைப்பிற்கு கதை எழுதிய இயக்குநர் ஜெகன்னாத், நடித்த பிரியங்கா, அரீஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இயக்குநர் சீமான், இயக்குநர் சேரன், மற்றும்
படத்தை வெளியிட்ட #லிப்ரா ரவீந்தர் சந்திர சேகரன், இணைந்து தயாரித்த #குங்ஃபூ ஆறுமுகம் ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுதர்சன், இசையமைப்பாளர் இஷான் தேவ், பி ஆர் ஓ A. ஜான் அனைவருக்கும் நன்றிகள்.
படைப்பு என்பது பொழுது போக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் “மிகமிக அவசரம்” படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன்.
மிகமிக அவசரம்” திரைப்படத்தை எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன்.
மிக மிக அவசரம் திரைப்படம் உருவாகவும் மக்களிடம் சென்று சேரவும் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் "மிகமிக அவசரம்" படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் @mkstalin அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் tq pic.twitter.com/ATCd6qtWmR
— sureshkamatchi (@sureshkamatchi) June 13, 2021
படம் உருவாகவும் மக்களிடம் சென்று சேரவும் காரணமாக இருந்த @PriyajoOfficial@LIBRAProduc ரவி, @jagan_dir ஒளிப்பதிவாளர் பரணீதரன்@directorcheran @i_Arishkumar @editorsudharsan @johnmediamanagr அனைவருக்கும் நன்றி.#tamilnadupolice
— sureshkamatchi (@sureshkamatchi) June 13, 2021











