” பாலு சீக்கிரமா எழுந்துவா ” இசைஞானி இளையராஜா நண்பருக்கு உருக்கமான வேண்டுகோள்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

திரைப்பட துறையில் உள்ள பிரபலங்களும் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சான் ஐஸ்வர்யா ராய் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்த வகையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் சூளைமேட்டில் உள்ள தனியார் எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மைல்டு மைல்டு கொரோனா தான் தனக்கு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் வீடியோ வெளியிட்டு இருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உள்ளார்.

எம்.ஜி.எம் மருத்துவமனையில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில் வருவது…

பாலு சீக்கிரமா எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன்.

நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை.

சினிமாவோடு தொடங்கியதும் அல்ல.

எங்கேயும் மேடை கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த இந்த இசை நிகழ்ச்சியை அந்த இசை நமது வாழ்வாகும்.

நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.

அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பும் இசையும் இசை எப்படி சுரங்களை விட்டு ஒன்றே ஒன்று பிரியாமல் இருக்கிறதோ அதே போல உனது நட்பும் என்னுடைய நட்பும் நமது நட்பு எந்த காலத்திலும் பிரிந்ததில்லை.

நாம் சண்டை போட்டாலும் சரி நம் இருவருக்கும் சண்டை இருந்தாலும் அதன் நட்பு சண்டை இல்லாமல் போனபோதும் அது நட்பு என்பதை நீயும் நன்றாக அறிவாய் நானும் நன்றாக அறிவேன்.

அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன் நீ நிச்சயமாக திரும்பி வருவாய் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது.

அது நிஜமாகவே நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.

பாலு சீக்கிரம் வா.

https://twitter.com/moviewingz/status/1294313837907197952?s=19

error: Content is protected !!