ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் பொதுத்தேர்வு வைத்துக்கொள்ளலாமே தமிழக அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் முற்றிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துமாறு தமிழக அரசுக்கு நடிகர் விவேக் வேண்டு கோள் வைத்து உள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அச்சத்தால் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான அட்டவணையையும் அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருப்பதாவது:

“பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயவு செய்து பரிசீலிக்கவும்”.

இவ்வாறு நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்…

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயவு செய்து மறுபரிசிலனை செய்ய வேண்டும்.

https://twitter.com/Actor_Vivek/status/1262092133009244165?s=19

error: Content is protected !!