பிகில் ஆடியோ: விஜய்யின் அரசியல் ஆசையை தூண்டிய நடிகர் ஆனந்த்ராஜ்?
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
டிவி நடிகை ரம்யா மற்றும் மிர்ச்சி சிவா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
ஒரு ரசிகன் தலைவனுக்கு அடித்தால் அது விசில். ஒரு தலைவன் தன் ரசிகனுக்கு அடித்தால் அதான் பிகில் என பன்ச் பேசினார் சிவா.
திரளான ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் மற்றும் அவரது பெற்றோர்களும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிகில் படத்தில் நடித்துள்ள நடிகர் ஆன்ந்த்ராஜ் மேடையில் பேசி வருகிறார்.
அவர் பேசியதாவது….
இந்த சத்தம்தான் மாநிலம் தாண்டி, நாட்டை தாண்டி, கண்டம் தாண்டி, ஆகாயம் வரை செல்லும்.
நடிகர் விஜய்யின் மகனுடன் நான் நடிக்க வேண்டும். அவன் நடிக்க வந்த பிறகு விஜய் எங்க இருப்பாருன்னு நீங்க தான் முடிவு செய்யனும் என பேசினார் ஆனந்த் ராஜ்.
இது விஜய்யின் அரசியல் ஆசையை தூண்டும் வகையில் இருப்பதால் அவரின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.