Tuesday, September 22
Shadow

பிப்ரவரி. 21ல் மோதிய ஆறு திரைப்படங்களில் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்த ஒரேயொரு திரைப்படம் ‘கன்னி மாடம்’

கடந்த வாரம் பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமை அன்று ஆறு திரைப்படங்கள் மோதியது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கி தயாரித்து நடித்து மீண்டும் ஒரு மரியாதை,

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் பிரசன்னா பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளி வந்த மாஃபியா,

புதிய இயக்குனர் ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் நட்டி அனன்யா மற்றும் லால் நடிப்பில் வெளி வந்த  ” காட்ஃபாதர் “

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி, வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியன், மைம் கோபி, பிரியங்கா சங்கர், நடிப்பில் வெளி வந்த “கன்னி மாடம்”

தேசிய விருது பெற்ற பாரம்” மற்றும் குட்டி தேவதை ஆகிய ஆறு திரைப்படங்கள் வெளியானது.

இதில் மற்ற திரைப்படங்களை காட்டிலும் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதை கவர்ந்த திரைப்படமாக கன்னி மாடம் பெயர் வாங்கி உள்ளது.

இதுவரை இந்த கன்னி மாடம் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தவண்ணம் உள்ளது கன்னி மாடம் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பாரம் படம் தேசிய விருது படமாக இருந்தபோதிலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் இயக்குனர் மிஷ்கின் இந்த திரைப்படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவரே நேரிமையாக பாரம் திரைப்படத்தின் சினிமா போஸ்டர்களையும் ஒட்டி வருகிறார்.

ஆக… மொத்தத்தில் இந்த வார ரேஸில் கன்னி மாடம் திரைப்படம் முதல் இடத்தை பெறும் எனத் தெரிகிறது.