பிரதமர் நரேந்திர மோடியிடம் தேர்தல் ஆணையம் சரண்-ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பிரதமர் மோடி கேதார்நாத் சென்றதையும், அதற்கு தொலைக்காட்சி சேனல்கள் முக்கியத்துவம் அளித்ததையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் பத்திரங்கள், மின்னணு எந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தியதில் இருந்து தேர்தல் தேதியை நிர்ணயித்தது, நமோ டி.வி.யை அனுமதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக்கொண்டது, இப்போது, கேதார்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் கமிஷன், மோடி மற்றும் அவரது குழு முன்பு சரணடைந்துவிட்டது எல்லா இந்தியர்களுக்கும் தெளிவாக தெரிந்துவிட்டது. தேர்தல் ஆணையம், அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்கக்கூடியதாக முன்பு இருந்தது. இனிமேல் அப்படி இருக்காது” என்று பதிவு செய்துள்ளார்.