பிரபல திரைப்பட இயக்குனருக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு

இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் நாட்டின் நிலை குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதி அதில் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பிய நிலையில் இந்த கடிதம் காரணமாக 49 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், சிறுபான்மையினர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை கடிதம் மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற 49 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி வழக்கு போடப்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய கொடுமை என்றும். நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.